எங்களிடம் புதிய வீடியோ படம் ஒன்று இருக்கிறது. ஆனால் இது ஒருவர் இன்னொருவரைப் புண்படுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்ட செக்ஸ் வீடியோ அல்ல. அதை விட இது மிகுந்த கவர்ச்சியானது. இது தேர்தலில் போடும் வாக்கைப் பற்றியது.
வாக்களிப்பது குடிமக்களுக்கான அடிப்படை உரிமை. இது மலேசியாவின் சமூக, அரசியல், பொருளாதாரப் போக்குகளைக் குடிமக்களாகிய நாம் தீர்மானிப்பதற்கு உரிய உரிமையாகும். ஆகவே இது நமது கடமைகளில் முக்கியமான ஒன்று. நம் வாழ்நாள் முடிந்த பிறகும் இதன் விளைவுகள் தொடரும். ஆகவே உங்களுக்காக மட்டுமன்றி உங்கள் எதிர்காலச் சந்ததியினருக்காவும் நீங்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்.
இந்த வீடியோ படம் உங்களுக்குப் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன். மற்ற திட்டங்களைப் போலவே இது ஒரு கூட்டுத் திட்டமாகும். இது பொது மக்களுக்கான ஒரு திட்டம். இதில் அரசியல்வாதிகள், வணிகர்கள், கலைஞர், நடிகர், விளையாட்டாளர் இவர்களோடு ஒரு விண்வெளி பாத்திரமும் கூடப் பங்காற்றுகிறது. கோலாலம்பூரில் ஒரு தீப்பொறி. அதன் விளைவுகள் மலேசியாவின் மூலை முடுக்கெல்லாம் பரவுகிறது.
இந்த வீடியோ படம் உங்களுக்குப் பிடிக்குமாயின் இதனைப் பதிவிறக்கம் செய்து உங்கள் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் காட்டுங்கள். கடைசியாக, இந்த வீடியோ படம் பற்றிய தகவல்களை இதில் உள்ள குறியீடுகளைப் பயன்படுத்தி மற்றவர்களுக்கும் தெரிவித்து உதவுங்கள். வாக்களிப்பு நிலையத்தில் உங்களைச் சந்திப்போம்.
பீட் தியோ ஓர் இசைக் கலைஞர் / நடிகர் / தயாரிப்பாளர். இவர் ஏஐஎம் விருதுகள் பல பெற்றவர். இவரது இசை அனைத்துலக அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பி.பி.சி. அனைத்துலக ஒலிபரப்புச் சேவை, தேசிய பொது வானொலி, கனடா ஒலிபரப்புக் கழகம், கே.பி.எஸ்., என்.எச்.கே ஆகியவற்றின் விருதுகள் பெற்றது. இவரது திரைப்படங்கள் வெனிஸ், கனஸ், தோக்யோ, ரொட்டர்டம், பெர்லின், புசான், கோல்டன் ஹோர்ஸ் தைபேய், டொரொன்டோ, பொம்பிடாவ் செண்டர், ஹாங்காங் ஆகிய இடங்களில் நடந்த திரைப்பட விழாக்களில் அனைத்துலகக் கவனத்தை ஈர்த்துள்ளன.
ஒரு கலைஞராக மட்டுமன்றி, சமூக அரசியல் பார்வையில் Here In My Home, 15Malaysia என்னும் வீடியோ படங்களையும் உருவாக்கியுள்ளார். இவ்விரு படங்களும் இலட்சக் கணக்கான மலேசியரால் பார்க்கப்பட்டுள்ளன. அண்மையில் யாசின் அஹ்மட்டின் 'டெலண்டைம்' படத்தில் இவர் இசை அமைத்த 'பெர்கி' என்னும் பாடலுக்கு 'அனுகெரஹ் சுவாரா லகு 2010' என்னும் இவ்வாண்டின் சிறந்த பாடலுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இவர் அப்டிலின் செளகியின் பப்படம் 2 படத்தில் முக்கிய துணை நடிகராக நடித்து வருகிறார்.
Cசி.என்.என். ஜி.ஓ (CNN GO) நடத்திய கணிப்பில் ஆசியாவில் 2010இல் அதிகம் ரசிக்கப்பட்ட 135 கலைஞர்களின் பட்டியலில் பீட் தியோ சேர்க்கப்பட்டுள்ளார். வெளிவர வேண்டிய இசை ஆல்பங்களுக்கு நடுவே இவரது படைப்புகள் குறித்து சில வட்டார நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகிறார். இலட்சிய நோக்குடைய செய்திப் படத் தயாரிப்புத் திட்டங்களிலும் பங்கெடுத்து வருகிறார்.
அல்பர்ட் லாவ் பீட் தியோவின் நீண்ட கால நண்பர். 2000ஆம் அண்டுகளில் வளர்ந்து வரும் பாடகர், பாடலாசிரியர்களாக இவர்கள் விளங்கினர். 2008இல் அல்பர்ட் லாவ் Here In My Home என்னும் படத்தில் பீட் தியோவிடம் துணை இயக்குநராகப் பணியாற்றினார். இவர்களது கூட்டணி 15Malaysia ைக் கடந்து இப்போது 'உண்டிலா' படத்தயாரிப்பில் தொடர்கிறது. அல்பர்ட் புதுமை இயக்குநர்களாகிய டான் சுய் முய், ஹோ யுஹாங் போன்றோருடன் பணியாற்றியுள்ளார்.
பஹிர் யூசோவ் வித்தியாசமான மூன்று திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். மற்றும் கிரே வோர்ல்ட்வைட் நிறுவனத்திற்காக இணையதள விளம்பரப் படங்களும் தயாரித்துள்ளார். 2010இல் மலாய் மொழி கற்பிக்கும் வீடியோ படத்தைத் தயாரித்தார். ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்துக்காகவும் ஆசியான் கூடைப்பந்து போட்டிக்காகவும் டிவிசி என்னும் படங்களைத் தயாரித்துள்ளார். இவை இஎஸ்பிஎன் ஆசியா என்னும் தொலைக்காட்சியில் ஒளி பரப்பப்பட்டன. பென்ஜி லிம் என்னும் தனது கூட்டாளியுடன் 'மீட்டர்' என்னும் குறும்படத்தை இயக்கினார். 2009இல் 15Malaysia என்னும் படத் தயாரிப்பில் பீட் தியோவோடு இணைந்து பணியாற்றினார். பஹிரின் மிக அண்மைய செயல்திட்டம் காய் எம். பஹாரின் புதிய படமாகிய 'ரிலேசன்ஷிப் ஸ்டெடஸ்' ஆகும்.
@Aisehman, Baki Zainal, Bront Palarae, Chelsia Ng, Daphne Iking, Jehan Miskin, Johan F. Khairuddin, Karamjit Singh, Lai Meng, Lee Chong Wei, Nurul Izzah Anwar, Rosnah Abd Rashid Shirlin, Rina Omar, Reshmonu, Sharifah Amani, Sazzy Falak, Reza Salleh, Tengku Azmil Zahruddin, Tony Fernandes, Wardina Safiyyah, Wee Ka Siong, Tengku Razaleigh Hamzah, Namewee, Afdlin Shauki, Pete Teo, Benji Lim, Yasmin Yusuf, Albert Law, A. Kohilan Pillay, Jason Lo, Mohan, Khalid Samad, Aizat Amdan, Tee Hui Ling, Usha Nandhini, Chia Ting Ting, Nur Farina, Sassi Tharan Rajoo, Nik Nazmi, Tony Pua & David Lai.
Allavneen, Amanullah, Ananthi, Arbaiyah Arifin, Arun, Ashur Aiman, Bee Tong, Cassie Goh, Choong Ooi Khang, Darniyati, Dr. Tan, Edward Ong, Elaine Tan, Emily Tan, Foo Guan Foong, Hari Krishnan, Ho Sze Chieng, Ivan Slowee, Jabba the Hutt, Jack Lee, Jeniffer Anne, Jinu, K.F. Ng, Kader Maideen, Kajtijah, Kong Si Ying, Lee Sheng Wang, Liew Yan Bin, Liew Ye Tzer, Maggie Liew, Mervyn Lee, Ms. TS-29-30, Muhammad Nur, Nagaraj, Nainav, Najwa Amira, Nalla Ibrahim, Ng Yu Sheng, Nikken Chong, Nur Adlina Izuddin, Pantian, Phui Mun, Priya Kulasagaran, Rahim, Rajan, S. Aimeer, Raravanan, Shalini Rajakumar, Suraya Amer, susan, Uncle Ismail & Ms. Hanis, Vinoth Kumar, Wong Mee Len, Yati, Yewi, Zahar Ahmad, Zahier Zamri, Zaim 'Baszm' Zaidee
Simon Ping
Aizat Naim, Ong Chun Wai, Sandie Lee, Teh U-Jinn
Michael Leow
Afdlin Shauki, Fred Chong, Namewee, Pacai, Pete Teo
Afdlin Shauki, Namewee, Pete Teo, Sassi Tharan Rajoo
Abbas Yeusuff, Arwin Muruga, Albert Law, Lakshwin Muruga, Lvinn Law, Nurul Izzah Anwar, Dinah S, Winnie Chiang, Zewen, Elise Yong
Fred Chong
Simon Lim
Albert Law, Copyleft Studio, Emily Tan, Fahmi Fadzil, Khang Tsung Hui
Air Adventure flying club, Banana Leaf Restaurant, Bot Hong, Church of St. Francis Xavier, Common Wisdom Teashop, David Hiscock, Global Green Synergy Sdn Bhd, Ho Yuhang, John-son oei, Joseph Lim, Kenneth Tan, Little India Jewellers Sdn Bhd, Malaysian Parliament, Masjid Al-Taqwa TTDI, Neil Foo, Restoran Yuk Kee, Sam Lim Eng Sim, Sri Mahamariamman Temple, Taman Tun Supermarket, Thean Hou Temple, Y&R Malaysia.